/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானை தாக்கியதில் கல்லுாரி மாணவர் இறப்பு
/
காட்டு யானை தாக்கியதில் கல்லுாரி மாணவர் இறப்பு
ADDED : ஜூன் 03, 2024 12:20 AM

வால்பாறை:வால்பாறை அருகே, காட்டு யானை தாக்கி கல்லுாரி மாணவர் இறந்தார். அவரது குடும்பத்துக்கு, வனத்துறை நிவாரணத்தொகை வழங்கியது.
வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகம் தனியார் காடுகள் தோட்டம் புதுக்காடு எஸ்டேட்டை சேர்ந்த சுரேஷ், முனியம்மா ஆகியோரின் மூத்த மகன் முகேஷ், 18. இவர், கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லுாரி தேர்வு முடிந்து புதுக்காடு எஸ்டேட்டுக்கு வந்தவர், நேற்றுமுன்தினம் இருசக்கர வாகனத்தில், புதுக்காடு எஸ்டேட்டில் இருந்து, சோலையாறு அணைக்கு செல்லும் ரோட்டில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, யானை தாக்கியதில், முகேஷ் இறந்தார்.
நேற்று வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு போலீசார் வாயிலாக உறவினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, வனச்சரகர் மணிகண்டன், உடனடி நிவாரணத்தொகையாக, 50 ஆயிரம் ரூபாயினை, முகேஷின் தந்தையிடம் வழங்கினார்.
தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் மானாம்பள்ளி வச்சரக களப்பணியாளர்கள், மனித வன உயிரின மோதல் தடுப்புக்குழுவினர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக, வனச்சரகர் தெரிவித்தார்.