/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவியர் அடித்தார்கள் கோல்! பார்த்தவர்கள் சொன்னார்கள் 'வாவ்'
/
கல்லுாரி மாணவியர் அடித்தார்கள் கோல்! பார்த்தவர்கள் சொன்னார்கள் 'வாவ்'
கல்லுாரி மாணவியர் அடித்தார்கள் கோல்! பார்த்தவர்கள் சொன்னார்கள் 'வாவ்'
கல்லுாரி மாணவியர் அடித்தார்கள் கோல்! பார்த்தவர்கள் சொன்னார்கள் 'வாவ்'
ADDED : செப் 17, 2024 11:28 PM

கோவை : கல்லுாரி மாணவியருக்கான முதல்வர் கோப்பை கால் பந்து போட்டியில், நிர்மலா மகளிர் கல்லுாரியும், பாரதியார் பல்கலையும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
கல்லுாரி மாணவியருக்கான முதல்வர் கோப்பை கால் பந்து போட்டிகள், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் நேற்றும், இன்றும் நடக்கின்றன.
இதில், அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை, நிர்மலா மகளிர் கல்லுாரி, மேட்டுப்பாளையம் ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லுாரி, வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி(சி.எம்.சி.,), பாரதியார் பல்கலை, சூலுாரில் உள்ள மைக்கேல் ஜாப் கல்லுாரி என, ஏழு அணிகள் பங்கேற்றன.
போட்டிகளை, கிருஷ்ணா கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சிபி, பொறியியல் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் துவக்கிவைத்தனர். காலிறுதி முதல் போட்டியில், நிர்மலா மகளிர் கல்லுாரி அணி, 6-0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ குமரன் கல்லுாரி அணியை வென்றது.
இரண்டாவது போட்டியில், அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை அணி, 2-0 என்ற கோல் கணக்கில் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியையும், மூன்றாவது போட்டியில், பாரதியார் பல்கலை அணி, 3-0 என்ற கோல் கணக்கில், சி.எம்.சி., கல்லுாரி அணியையும் வென்றன.
அரையிறுதியில், நிர்மலா மகளிர் கல்லுாரி அணி, 5-0 என்ற கோல் கணக்கில் அவினாாசிலிங்கம் மகளிர் பல்கலை அணியை வென்றது.
பாரதியார் பல்கலை அணி, 3-0 என்ற கோல் கணக்கில், 'பை லெவல்' அடிப்படையில் அரையிறுதிக்கு தேர்வான மைக்கேல் ஜாப் கல்லுாரி அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.