/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நம் எண்ணங்களின் வெளிப்பாடே வண்ணம்! தேர்ந்தெடுப்பதில் வேண்டும் கூடுதல் கவனம்
/
நம் எண்ணங்களின் வெளிப்பாடே வண்ணம்! தேர்ந்தெடுப்பதில் வேண்டும் கூடுதல் கவனம்
நம் எண்ணங்களின் வெளிப்பாடே வண்ணம்! தேர்ந்தெடுப்பதில் வேண்டும் கூடுதல் கவனம்
நம் எண்ணங்களின் வெளிப்பாடே வண்ணம்! தேர்ந்தெடுப்பதில் வேண்டும் கூடுதல் கவனம்
ADDED : ஜூலை 27, 2024 01:56 AM

கட்டடத்தில் வர்ணம் என்பது, மிக முக்கிய பங்கு வகிக்கும் பணியை செய்கிறது. மனிதர்களின் எண்ணங்களின் வெளிப்பாடு பல்வேறு வகையில் இருப்பது போல், வர்ணங்களும் பல்வேறு வகையில் ஆகிவிட்டது.
இதுகுறித்து, கோயமுத்துார் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்(கொசினா) முன்னாள் தலைவர் பாலமுருகன் கூறியதாவது:
வர்ண சக்கரம், ஊதா, இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய நிறங்கள் உள்ளன. இவ்வகையான வண்ணங்கள் சூழலுக்கு ஏதுவாக இருக்கும். வர்ண அலங்காரம் செய்யும் போது நமக்குள் எழ வேண்டிய சில கேள்விகள்.
1. நமது மேற்கூரை உயரமானதா? தாழ்வானதா?
2. நமது அறைக்கு தேவையான சூரிய வெளிச்சம் பெற்றுள்ளதா? இல்லையா?
3. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மென்மையானதாகவோ, பிரதிபலிப்பதாகவோ இருக்க வேண்டுமா?
வர்ணங்கள் ஒரு அறையின் தட்ப வெப்ப நிலையை மாற்றக் கூடியவை. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய இதமான வர்ணங்கள், அறையின் வெப்பத்தை அதிகரிக்க செய்யும். நீலம், பச்சை, ஊதா போன்ற குளிர் வர்ணங்கள், வெப்பத்தை தணிக்க செய்யும்.
பெயின்டிங் பிரதிபலிப்பு காரணிகள்:
வெள்ளை 84 சதவீதம், மஞ்சள் 69, ஆகாய நீலம் 47, கடல் நீலம் 38, பிரவுன் 31, பச்சை 19, சிவப்பு 16 சதவீதம்.
வெளிப்புற சுவரில் பிரதிபலிப்பு அதிகம் உள்ள வர்ணம் பூசினால், வெப்பம் ஊடுருவுவது தடுக்கப்படும். வெள்ளை, ஐவரி, பச்சை போன்ற நிறங்கள் இணக்கமானவை. குடியிருப்பு அல்லது அலுவலக கட்டடங்களில் கூட, உட்புற நிறங்கள் பூசும் முன் பல்வேறு காரணிகளை மனதில் கொண்டு பூச வேண்டும்.
பழைய கட்டடத்தில் புதுப்பித்தல் பணிக்கும் அல்லது தொடர் பராமரிப்பு பணிக்கும் பெயின்டிங் செய்யும் போது, கவனம் தேவை. பழைய சுவரில் என்ன மாதிரி குணம் கொண்ட வர்ணம் பூசியுள்ளனர் என்பதை அறிந்து பின், அதன் மீது மீண்டும் பூச வேண்டும்.
மிக முக்கியமாக, அனுபவமுள்ள பெயின்டர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். அவர்கள் முன்னர் செய்த பணிகளை சென்று பார்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.