ADDED : ஏப் 27, 2024 02:12 AM

ஒரு டேங்க், கொஞ்சம் பிஷ் இருந்தா போதும்... இந்த சம்மர்ல, உங்க குட்டீஸ் ரொம்ப குஷியாகிடுவாங்க. இதுலயும், கலர்புல்லான ஸ்மால் வெரைட்டி பிஷ், நல்லா ஸ்விம் பண்ணும். இதோட விலையும் ரொம்ப குறைவு என்கின்றனர், கோவை, பீளமேட்டில் உள்ள ஹோல்சேல் அக்குவாரியம் ஷாப் ஊழியர்கள்.
கலர் விடோ டெட்ராஸ்
ரெட், ப்ளூ, ஆரஞ்ச், கிரீன், பிங்க்-னு ஏழு கலர்ஸ்ல, இந்த டெட்ரா வெரைட்டி பிஷ் கடைகள்ல கிடைக்குது. பாக்குறதுக்கு கிளிட்டர் மாதிரி மின்னுறதோட, ஆக்டிவ்வா நீந்திக்கிட்டே இருக்கும். இந்த விடோ டெட்ராஸ் மட்டும் தனியா வளர்த்தா போதும்; டேங்கே கலர்புல்லா இருக்கும். ஏசி., மாதிரியான சூழல் தான் இதோட ஸ்கின்னுக்கு ரொம்ப நல்லதாம். ஒரு டஜன் கலர் டெட்ராஸ் விலை வெறும், 270 ரூபாய் தானாம்.
சிச்லிட்ஸ்
இது ஒரு முதுகெலும்புள்ள மீன் வெரைட்டி. நிறைய கலர்ஸ்ல கடைகள்ல கிடைக்குது. சிச்லிட்ஸ்ல நிறைய வெரைட்டி பிஷ் இருக்கறதால, ஒவ்வொரு ரகமும் வெவ்வேற சைஸ்ல வளருமாம். ஆனா பேசிக்கா இது, அக்ரசிவ் கேரக்டர். வேற வெரைட்டி பிஷ் இருக்குற டேங்குல இதை விட்டுடாதீங்க. தனியா வளக்குறது தான் நல்லது. அடிக்கடி ஒன் அண்டு டூ போறதால, தொட்டி தண்ணிய மாத்திட்டே இருக்கணுமாம்.
கப்பீஸ்
கப்பீஸ்க்கு வால் நீளமா, விரிஞ்சி இருக்கறதால, அதோட டேங்க்குல லைட் செட்அப் வச்சிட்டா, நீந்தும் போது பார்க்க அழகா இருக்கும். ரெயின்போ கலர்ஸ்ல இருக்க கப்பீஸோட ஸ்கின், பளபளன்னு இருக்கும். விலையும் ரொம்ப குறைவு. ஒரு ஆணோட, மூணு பொண்ணு கப்பீஸ் சேர்த்து டேங்குல விட்டுட்டா போதும். குரூப்பா சேர்ந்து நீந்திக்கிட்டே இருக்கும். டேங்குல இருக்க தண்ணீர் சுத்தமா இருந்தா, குட்டி கப்பீஸ் கூட, மூணு நாளைக்கு சாப்பாடே இல்லாம, ஆக்டிவ்வா இருக்கும்.

