/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த கமிஷனர் நடவடிக்கை
/
மாநகராட்சி பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த கமிஷனர் நடவடிக்கை
மாநகராட்சி பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த கமிஷனர் நடவடிக்கை
மாநகராட்சி பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த கமிஷனர் நடவடிக்கை
ADDED : ஜூன் 26, 2024 10:46 PM
கோவை : மாநகராட்சியின், 26 பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அரசிடம் ரூ.10 கோடி நிதி பெற, மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களில், 83 ஆரம்ப, 38 நடுநிலை, 10 உயர்நிலை, 17 மேல்நிலை என, 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், புதிய வகுப்பறைகள் கட்டுவது, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டுவது, மேஜைகள், புத்தகங்கள் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சுண்டக்காமுத்துார் ரோடு, செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, அனுப்பர்பாளையம் மாநகராட்சி ஆரம்ப பள்ளி, அஞ்சுகம் நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளி, ஆவாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.
கற்பித்தல், கழிப்பறையின் துாய்மை, பராமரிக்கப்படும் விதம் குறித்தும் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் கூறுகையில், ''மாநகராட்சியில் உள்ள, 26 பள்ளிகளில் இருந்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, தேவையான ரூ.10 கோடியை வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.