/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தர்மம் - துரோகம் இடையே போட்டி தி.மு.க., மீது வேலுமணி 'தாக்குதல்'
/
தர்மம் - துரோகம் இடையே போட்டி தி.மு.க., மீது வேலுமணி 'தாக்குதல்'
தர்மம் - துரோகம் இடையே போட்டி தி.மு.க., மீது வேலுமணி 'தாக்குதல்'
தர்மம் - துரோகம் இடையே போட்டி தி.மு.க., மீது வேலுமணி 'தாக்குதல்'
ADDED : மார் 28, 2024 03:51 AM
கோவை : கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், ஹோப்காலேஜ் அருகே, தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
அ.தி.மு.க.,வில் இருந்து கொண்டு துரோகம் செய்தவர், இன்று தி.மு.க.,வில் வேட்பாளராக நிற்கிறார். தி.மு.க.,வினரே அவரை ஏற்க மாட்டார்கள். நமக்கு போட்டி தி.மு.க.,தான்.
தி.மு.க.,வினர் ஜெயிக்கும் வரை கூட இருப்பார்கள். வெற்றி பெற்றவுடன் எங்கு போவார்கள் என்றே தெரியாது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வினர் மோசடி செய்தே வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் அது எடுபடாது. அவர்கள் வெற்றி பெற்றும், கோவைக்கு வளர்ச்சிக்கான திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. 50 ஆண்டு கால வளர்ச்சியை ஐந்தே ஆண்டுகளில் நாம் கொடுத்துள்ளோம்.
எனவே, நெஞ்சை நிமிர்த்தி மக்களிடம் ஓட்டு கேட்போம். தி.மு.க., என்றாலே பொய்தான். இவர்களால் மக்களுக்கும் நிம்மதி இல்லை; அரசு ஊழியர்களும் அதிருப்தியில் உள்ளனர். இது தர்மத்துக்கும் துரோகத்துக்கும் இடையே நடக்கும் போட்டி. எதிரிகள், துரோகிகளிடம் இருந்து கட்சியை மீட்டெடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. எனவே, கட்சியினர் தீவிரமாக பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், ஜெயராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.