/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டங்களில் ஒயர் திருட்டு புகார்
/
தோட்டங்களில் ஒயர் திருட்டு புகார்
ADDED : ஆக 24, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதியில், தோட்டங்களில், தொடர்ந்து மின் மோட்டார் ஒயர்கள் திருடு போவதாக, விவசாயிகள் போலீசில் புகார் அளித்தனர்.
தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தோட்டங்களில், கடந்த சில மாதங்களாகவே, மின் மோட்டார் ஒயர் திருட்டு போய் வருகிறது. திருட்டை தடுக்கக்கோரி, அப்பகுதி விவசாயிகள், 20க்கும் மேற்பட்டோர், தொண்டாமுத்தூர் போலீசில் நேற்று புகார் அளித்தனர்.

