/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டல்களில் உணவு தயாரிப்பு: சுகாதாரம் இல்லையென புகார்
/
ஓட்டல்களில் உணவு தயாரிப்பு: சுகாதாரம் இல்லையென புகார்
ஓட்டல்களில் உணவு தயாரிப்பு: சுகாதாரம் இல்லையென புகார்
ஓட்டல்களில் உணவு தயாரிப்பு: சுகாதாரம் இல்லையென புகார்
ADDED : மார் 29, 2024 10:57 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகர் மற்றும் முக்கிய வழித்தடங்களில், ஓட்டல்களில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், முக்கிய வழித்தடங்களில், சாலையொட்டி ஓட்டல்கள் அமைந்துள்ளன. பெரிய அளவிலான ஓட்டல்களில் அதற்கான சமையல் அறை, தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிறிய அளவிலான ஓட்டல்களில் உணவு தயாரிப்பு முகப்பு பகுதியில் திறந்தவெளியில் உள்ளது. ரோடுகளில் செல்லும் வாகனங்களின் கரும்புகை, பறக்கும் மண் துகள்கள் உள்ளிட்டவைகள் இந்த உணவுகளில் படிகிறது. வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு கிடைப்பதில்லை என, புகார் எழுகிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது: ஓட்டல்களில், முகப்பு பகுதியிலேயே உணவு தயாரிக்கப்படுகிறது. அங்கிருந்து சாலையை நோக்கியே உஷ்ண காற்று வெளியேறுவதால், அவ்வழித்தடத்தில் வாகனங்களில் பயணிக்கும் மக்கள், பாதசாரிகள் பாதிக்கின்றனர்.
இதைத்தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மவுனமாக உள்ளனர். துறை ரீதியான அதிகாரிகள், இத்தகைய ஓட்டல்களில் ஆய்வு செய்வதோடு மக்களுக்கு வினியோகம் செய்யும் உணவுகளை சுகாதாரமான முறையில் வழங்க அறிவுறுத்த வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

