/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணிக்கு இரும்பு பலகை ;பணியிடத்தில் ஆபத்து என புகார்
/
துாய்மை பணிக்கு இரும்பு பலகை ;பணியிடத்தில் ஆபத்து என புகார்
துாய்மை பணிக்கு இரும்பு பலகை ;பணியிடத்தில் ஆபத்து என புகார்
துாய்மை பணிக்கு இரும்பு பலகை ;பணியிடத்தில் ஆபத்து என புகார்
ADDED : ஜூலை 01, 2024 12:08 AM
கோவை;நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு, சமீபத்தில் உபகரண தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்காலிக பணியாளர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக, அதிருப்தி எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சியில், 2,129 நிரந்தரம், 4,203 தற்காலிக துாய்மை பணியாளர்கள் மற்றும், 795 கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர்.
சமீபத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பொது சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் உள்ளிட்டோர் மண்டலம் தோறும், நிரந்தர பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினர்.
ஆனால், தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு, மழைக்கால பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கப்படாததால், பாகுபாடு காட்டுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
பாரதிய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்க அமைப்பு இணை செயலாளர்(துாய்மை பணியாளர் பிரிவு) ஸ்டாலின் பிரபு கூறியதாவது:
நிரந்தர பணியாளர்கள் செய்யும் வேலையைத்தான், தற்காலிக பணியாளர்களும் செய்கின்றனர். எனவே, இவர்களுக்கும் தளவாட பொருட்கள் அடங்கிய தொகுப்பை, மாநகராட்சி வழங்க வேண்டும். மழை சமயத்தில், தற்காலிக துாய்மை பணியாளர்கள் அனைவரும் எவ்வித பாதுகாப்பு உபகரணம் இன்றி, நனைந்தபடியே பணிபுரிகின்றனர்.
உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதால், 'ரெயின் கோட்' உடனடியாக வழங்க வேண்டும். சாக்கடையை சுத்தம் செய்வோர், மாநகராட்சியால் கொடுக்கப்பட்ட இரும்பு பலகையை பயன்படுத்துகின்றனர்.
சாக்கடையை ஒட்டி, மின் கம்பங்கள் அதிகம் இருப்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. மரப்பலகைகளால் ஆன உபகரணங்களை வழங்க வேண்டும்.
துாய்மை பணியாளர்களிடம் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து, மாநகராட்சி கமிஷனர் 'சப் கமிட்டி' கூட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது,''தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கும், உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.