தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நிறைவு பெற்றது 'தினமலர் - வழிகாட்டி!'

நிறைவு பெற்றது 'தினமலர் - வழிகாட்டி!'

நிறைவு பெற்றது 'தினமலர் - வழிகாட்டி!'


ADDED : மார் 26, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், குழப்பங்களுக்கு தீர்வு கொடுக்கும் வகையில், கடந்த மூன்று நாட்களாக நடந்த, 'தினமலர்- வழிகாட்டி' நிகழ்ச்சி, நேற்றுடன் நிறைவடைந்தது.

'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழுமங்கள் இணைந்து, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் முக்கிய பங்களிப்பாளர்களாகவும், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, ஸ்ரீ சக்தி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி இணை ஸ்பான்சர்களாகவும், கற்பகம் கல்விநிறுவனம், எஸ்.என்.எஸ்., கல்விநிறுவனங்கள், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, கே.எம்.சி.எச்., என்.ஜி.பி கல்வி நிறுவனங்கள், சேரன் கல்விக்குழுமம், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம், ரத்தினம் கல்விக்குழுமம், ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லுாரி, ஸ்பான்சர்களாகவும் தினமலர் நாளிதழுடன் இணைந்து, இந்நிகழ்ச்சியை நடத்தின.

கருத்தரங்கில் கல்வியாளர்கள், துறை வல்லுநர்கள் பங்கேற்று, உயர்கல்வி தகவல்களை வாரி வழங்கினர்.

பெற்றோர், மாணவ மாணவியர் திரளாக பங்கேற்று பயன் அடைந்தனர். பல்வேறு கல்லுாரி அரங்குகளில் இருந்து சேர்க்கை விண்ணப்பம் பெற்றுச் சென்றனர்.

வழிகாட்டி நிகழ்வுக்கு இடையில், மாணவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்து, கோவையை சேர்ந்த சரண்யா லேப்டாப் பரிசும், கோவையை சேர்ந்த சஞ்சிதா டேப்லெட் பரிசும் வென்றனர்.

கோவையை சேர்ந்த சூர்யா, திருப்பூரை சேர்ந்த பவதாரணி, கோவையை சேர்ந்த சம்ரிதா மற்றும் கணேஷ், நீலகிரியை சேர்ந்த முகமது ஆஷிப் ஆகியோர், ஸ்மார்ட் வாட்ச் பரிசையும் தட்டிச்சென்றனர்.

நன்றி... நன்றி... நன்றி!

தினமலர் நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில், கரம் கோர்த்த ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழுமங்கள் மற்றும் முக்கிய பங்களிப்பாளர்களான ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் , இணை ஸ்பான்சர்களான ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, ஸ்ரீ சக்தி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, ஸ்பான்சர்களாக உடன் இணைந்த கற்பகம் கல்வி நிறுவனம், எஸ்.என்.எஸ்., கல்விநிறுவனங்கள், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, கே.எம்.சி.எச்., என்.ஜி.பி கல்விநிறுவனங்கள், சேரன் கல்விக்குழுமம், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம், ரத்தினம் கல்விக்குழுமம், ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லுாரி ஆகியோருக்கு, நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அரங்கம் அமைத்த கல்லுாரிகளுக்கு நன்றிகள். நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்த, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு துறைக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுடன் வந்த பெற்றோர், மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறது தினமலர் நாளிதழ்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us