/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 01, 2024 12:39 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் காங்., கட்சி சார்பில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவகலம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி தலைமை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கணேசன், காளீஸ்வரன், பாலு, பேபி மற்றும் நகர வட்டார தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட மனித உரிமை தலைவர் பஞ்சலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பாரபட்சமாக இருப்பதாகவும், சில மாநிலங்களுக்கு வாரி வழங்கி தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.