ADDED : மார் 06, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள, இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின் கீழ் செயல்படும், சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்பில், சுற்றுச்சூழலின் நீடித்த நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு, பல்கலை அரங்கில் நடந்தது.
மாநாட்டின் துவக்க விழாவில், துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், ''அதிநவீன தொழில்நுட்பத்தால், உலகளாவிய அளவில் மாசு கட்டுப்பாடு, கார்பன் அடிச்சுவடு குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது,''என்றார்.
கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் துணை இயக்குனர் விவேக்குமார், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.