/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு
/
தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 11, 2024 10:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,- மாநில தடகள போட்டியில், தங்க பதக்கம் பெற்ற மாணவருக்கு, கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான தடகளப்போட்டிகள் சென்னையில் நடந்தது.
இதில் டிரையத்லான் விளையாட்டு போட்டியில், 14 வயதுக்குட்பட்ட ஜூனியர் பிரிவில், கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் இளமுகிலன், முதலிடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவருக்கு, பள்ளித்தாளாளர் சின்னராஜ், பள்ளி முதல்வர் சாரதாமணிதேவி, நிர்வாகத்தினர், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

