/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காட்-பி' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
'காட்-பி' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
'காட்-பி' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
'காட்-பி' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 04, 2024 05:00 AM
கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 'காட்-பி' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பாராட்டு தெரிவித்தார்.
2024 - -25ம் கல்வியாண்டில், பயோடெக்னாலஜியில் டிபிடி- ஆதரவு முதுகலை (டிபிடி பிஜி) திட்டங்களுக்கான சேர்க்கைக்காக ஏப்ரல் 2024ல், தேசிய தேர்வு முகமையால் 'கிராஜூவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் பயோடெக்னாலஜி -காட்-பி 2024' தேர்வு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 127 நகரங்களில் கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்பட்டது.
வேளாண் பல்கலையில், பயோடெக்னாலஜியில் பங்கேற்ற மாணவர்களில் ஒன்பது பேர் காட்-பி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் யோகராஜ் 150 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மாணவர்கள் அர்ச்சிதா (142), ரிதன்யா (133), கீர்த்திவாசன் (131), தினேஷ் (130), பபீனா (128), அஜித் (115), அருள்யாழினி (111.5), ராஜாராம் (105.5) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காட்-பி தேர்வு 2024ன் முடிவுகள், மதிப்பெண் அட்டை வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் பயோடெக்னாலஜி, அது சார்ந்த அறிவியலில் டிபிடி ஆதரவு பெற்ற முதுகலை (டிபிடி பிஜி) திட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவர்.
ஒன்பது மாணவர்களில் யோகராஜ், அர்ச்சிதா, ரிதன்யா, அஜித், ராஜாராம் ஆகிய 5 பேர் கொச்சியில் உள்ள அறிவியல், தொழில்நுட்ப பல்கலை கடல் உயிரித் தொழில்நுட்ப திட்டத்தில், எம்.டெக் படிப்பிற்கான இடத்தைப் பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு உதவித் தொகையாக, மாதம் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒன்பது மாணவர்களும், மும்பையின் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி வழங்கிய தகுதிப் பட்டியலில் உள்ளனர். அவர்களின் கலந்தாய்வு விரைவில் நடைபெறும்.
காட்-பி தேர்வில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களை, துணைவேந்தர் கீதாலட்சுமி பாராட்டினார். முதுகலை அறிவியல் முதன்மையர் செந்தில், மாணவர்களைப் பாராட்டி, ஊக்குவிக்கும் வகையில் பேசினார்.