/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 04, 2024 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.
அதில், பார்லிமென்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுலை அவதுாறாக பேசியதாக, அமைச்சர் அனுராக் தாகூரை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், நகர வட்டார தலைவர்கள் செந்தில்குமார், அமீர், இஸ்மாயில், முருகநாதன், மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.