/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரத்து குறைந்தும் நிலையான விலை
/
வரத்து குறைந்தும் நிலையான விலை
ADDED : மார் 29, 2024 12:46 AM
தொண்டாமுத்துார்;தொண்டாமுத்துார் வட்டாரத்தில், வரத்து குறைந்துள்ள நிலையிலும், தக்காளி விலையிலும் உயர்வில்லை.
தொண்டாமுத்துார் வட்டாரத்தில் பரவலாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவைகள் முக்கிய பயிராக பயிரிடப்படுகின்றன. இங்குள்ள விவசாயிகள், தங்களின் விளைப்பொருட்களை தொண்டாமுத்துார் மற்றும் பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.
தொண்டாமுத்துார் வட்டாரத்தில், தற்போது, தக்காளி விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் விலையில் உயர்வில்லை. பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று, 14 கிலோ எடையுள்ள ஒரு டிப்பர் தக்காளி, 300 ரூபாய்க்கு விற்பனையானது. உள்ளூரில் தக்காளி குறைந்து, வெளியூர் தக்காளி விற்பனைக்கு வருகிறது. ஆனால், அதுவும் குறைந்த அளவே வருவதால், காய்கறிகளை வாங்க ஆட்கள் பெரும்பாலும் வருவதில்லை. அதனால், விலையும் உயரவில்லை என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

