/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ச்சி கட்டுப்பாடு விதிகளை மீறி கட்டுமானம்; அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை
/
வளர்ச்சி கட்டுப்பாடு விதிகளை மீறி கட்டுமானம்; அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை
வளர்ச்சி கட்டுப்பாடு விதிகளை மீறி கட்டுமானம்; அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை
வளர்ச்சி கட்டுப்பாடு விதிகளை மீறி கட்டுமானம்; அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை
ADDED : மார் 29, 2024 10:56 PM
பொள்ளாச்சி;நகர்ப்புறங்களுக்காக உருவாக்கப்பட்ட வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளை மீறி, பொள்ளாச்சி நகரில், கட்டடங்கள் எழுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தைத் தவிர்த்து, பிற மாவட்ட முக்கிய நகரங்களில், ஒருங்கிணைந்த உள்ளூர் திட்டக் குழுமங்கள் செயல்படுகின்றன. அதற்கேற்ப முக்கிய நகரங்களில், படிப்படியாக 'மாஸ்டர் பிளான்' நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.
இத்தகைய உள்ளூர் திட்டக் குழுமப் பகுதிகளில், 'லே--அவுட்' மற்றும் பெரிய கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம், குழுமத்துக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
திட்ட அனுமதி வழங்கும்போது, கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க, தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு, வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகள் வரையறுக்கப்பட்டன. ஒருங்கிணைந்த உள்ளூர் திட்டக்குழுமப் பகுதிகளில், இந்த வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகள், நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டன.
அதன்படி, கட்டட உயரம், பக்கத்திறவிடம், திறந்தவெளி, அவசர வழி, 'பார்க்கிங்' போன்றவை, இந்த விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, நகரப் பகுதிகளில், வரன்முறையின்றி கட்டுமானங்கள் உருவாக்கப்படுவதைத் தடுத்து, மக்களுக்கு கூடுதல் வசதி, பாதுகாப்பை வழங்கவே, இந்த விதிகள் உருவாக்கப்பட்டன.
ஆனால், பொள்ளாச்சி நகரில், வளர்ச்சி கட்டப்பாட்டு விதிகளை மீறியே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிலம் பற்றாக்குறையாக இருந்தாலும், விதிமீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனால், நகரின் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து, பாதுக்காப்பற்ற சூழல் ஏற்படுகிறது.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'நகரில் நில மதிப்பு அதிகம், லாப நோக்கம் போன்ற பல்வேறு காரணங்களால், விதிமீறி கட்டடம் கட்டப்பட்டு வருகின்றன. வணிகக் கடைகள் நிறைந்த பெரும்பாலான கட்டடங்களில் போதுமான அளவில் 'பார்க்கிங்' வசதி கிடையாது.
உள்ளூர் திட்டக் குழுமங்கள் அனுமதி பெற்றிருந்தாலும், அனுமதிக்கு மாறாகவே, கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. துறை ரீதியான அதிகாரிகளும் கண்டுகொள்வது கிடையாது,' என்றனர்.

