/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமானப் பொருள் விலை உயர்வு; அரசு வளர்ச்சி பணிகள் பாதிப்பு
/
கட்டுமானப் பொருள் விலை உயர்வு; அரசு வளர்ச்சி பணிகள் பாதிப்பு
கட்டுமானப் பொருள் விலை உயர்வு; அரசு வளர்ச்சி பணிகள் பாதிப்பு
கட்டுமானப் பொருள் விலை உயர்வு; அரசு வளர்ச்சி பணிகள் பாதிப்பு
ADDED : மார் 04, 2025 11:28 PM
மேட்டுப்பாளையம்; 'மூலப் பொருட்களின் விலை உயர்வால் அரசின் திட்ட வளர்ச்சி பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டுமானப் பொருள்கள் சரியான விலைக்கு கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒப்பந்ததாரர்களின் ஆலோசனைக் கூட்டம், அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில், 65க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக அரசின் திட்டங்களை ஒப்பந்த புள்ளி முறையில், பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது திட்டப் பணிகளை செய்ய தேவையான மூலப்பொருட்களான எம்.சாண்ட், ஜல்லி, மெட்டல் போன்ற கட்டுமான பொருட்களின் விலை, கடந்த ஆறு மாதங்களில் இரண்டு முறை உயர்ந்துள்ளன. இதனால் அரசு வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி, சரியான விலைக்கு அரசின் திட்ட பணிகளுக்கு கட்டுமான பொருட்கள் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஊராட்சி ஒன்றியங்களிலும் மற்றும் ஊராட்சிகளிலும் பிடித்தம் செய்த வருமான வரி, ஜி.எஸ்.டி., ஆகியவற்றை சரியான முறையில் அந்தந்த துறைக்கு செலுத்த வேண்டும்.
பணி முடிந்த பின், பணிகளை அளவீடு செய்து உரிய காலத்தில் பட்டியல் தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.