/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தாமதம்
/
ஊராட்சியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தாமதம்
ஊராட்சியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தாமதம்
ஊராட்சியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தாமதம்
ADDED : மே 01, 2024 11:03 PM

உடுமலை : உடுக்கம்பாளையம் ஊராட்சியில், குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தாமதமாக நடப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உடுமலை ஒன்றியம் உடுக்கம்பாளையம் ஊராட்சியில், தோட்டத்து சாைளகளில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
தோட்டத்து பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கும், குழாய் வாயிலாக வினியோகம் செய்வதற்கும், அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில், 15வது மானிய நிதிக்குழு நிதி ஒதுக்கீட்டில், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் துவக்கப்பட்டன.
ஆனால் பணிகள் இழுபறியான நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் குழாய்களை விரைவில் அமைத்து தருவதற்கு, மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தான் இப்பணிகள் நடக்கிறது. குழாய்கள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்ததாரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது குழாய்கள், சின்டெக்ஸ் தொட்டிகளும் குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைக்கும் பணிகளை தொடர்கின்றனர்' என்றனர்.

