/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டட தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
/
கட்டட தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : பிப் 26, 2025 04:09 AM

கோவை; கோவை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., கட்டடத் தொழிலாளர் சங்கத்தின், மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் சேரன் டவர் அருகில் உள்ள, திவ்யோதயா அரங்கில் நடந்தது. சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கவுரவ தலைவர்களாக செல்வராஜ், பாலகிருஷ்ணன், தியாகராஜன், ஆகியோரும், மாவட்ட தலைவராக கோட்டை நாராயணனும், செயலாளராக செல்வம், பொருளாளராக செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில், கட்டடத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 3,000 ரூபாய் - வழங்கப்பட வேண்டும், பதிவு செய்யப்பட்ட கட்டடத் தொழிலாளர்கள் அனைவருக்கும், இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு வசதி செய்து தரப்பட வேண்டும், வீடு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் நல வாரியம் சார்பில் அரசு வீடு கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

