/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நீர்ச்சத்து காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்'
/
'நீர்ச்சத்து காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்'
ADDED : ஏப் 26, 2024 11:21 PM
அன்னுார்: 'நீர் சத்து அதிகமாக உள்ள காய்கறி, பழ வகைகளை உட்கொள்ள வேண்டும்,' என மாணவ, மாணவியருக்கு, அறிவுரை வழங்கப்பட்டது.
அன்னுார், அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கருத்தரங்கில் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் பேசுகையில், ''கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மனித உடலின் வெப்பநிலை சாதாரணமாக 98.4 டிகிரி பாரன்ஹீட். ஆனால் வெயில் அதிகமாக அடிக்கும் போது உடலின் வெப்பநிலை உயர்கிறது.
இதனால் உடல் சோர்வு, அதிகப்படி தண்ணீர் தாகம், மயக்கம், தலை சுற்றல் ஏற்படும். சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற உப்புகள் வெளியேறி உடல் சோர்ந்து விடும்.
இந்த சமயத்தில் ஒரு சில மாற்றங்களை தவறாமல் மேற்கொண்டு வந்தால் வெப்ப நோய்களிலிருந்து விடுபடலாம், நீர்ச் சத்து மிகுதியாக உள்ள காய்கறிகளை பழ வகைகளை உட்கொள்ள வேண்டும். மண்பானை நீரை அருந்த வேண்டும்.
விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், ஓ.ஆர்.எஸ்., மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும், தற்போது கோடை விடுமுறையில் கூடுதல் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளில் பங்கேற்க வேண்டும்,'' என்றனர்.

