/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலாவதி தேதியின்றி உணவுப்பொருட்கள்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி
/
காலாவதி தேதியின்றி உணவுப்பொருட்கள்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி
காலாவதி தேதியின்றி உணவுப்பொருட்கள்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி
காலாவதி தேதியின்றி உணவுப்பொருட்கள்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி
ADDED : மார் 29, 2024 10:38 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில் உள்ள சில கடைகளில், பொட்டலம் இடப்பட்ட உணவுப் பொருட்கள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், நாளுக்குநாள் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பெருகி வருகின்றன. அதற்கேற்ப பொள்ளாச்சி நகரில் உள்ள வணிகக் கடைகளில் பாக்கெட்டில் அடைக்கப்படும் உணவு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் இத்தகைய உணவுப் பொருட்களில், தயாரிப்பாளர் பெயர் மற்றும் முழுமுகவரி, நிகர தரம், அளவு, எடை ஆகியவை இடம் பெறுவதில்லை.
மேலும், லாட், கோடு பேட்ச், பேட்ச் எண், 'டிசென்டிங்' முறையில் மூலப்பொருட்கள் பட்டியல், ஊட்டசத்து தகவல்கள், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, பயன்படுத்தும் காலம், சைவம் அல்லது அசைவ குறியீடு போன்றவையும் கிடையாது.
நீண்ட நாட்கள் கடைகளில் வைக்கப்பட்டிருந்தாலும், அவைகள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் வீட்டிற்குச் சென்று பிரித்து சாப்பிடும் போதே அதன் தரத்தை கண்டறிய முடிகிறது. காலாவதி உணவுப் பொருட்கள் விற்பனை குறித்து கேள்வி எழுப்பினாலும், கடை உரிமையாளர்கள் சரிவர பதில் அளிப்பதில்லை.
இதுகுறித்து, மக்கள் கூறியதாவது:
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி, பொட்டலமிட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்படாத அளவுக்கு அதிகமான வண்ணங்கள் மற்றும் பதனப்பொருட்கள் சேர்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பெரும்பாலான பேக்கரிகள் மற்றும் சில டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில், குழந்தைகளை கவரும் வகையில், பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இத்தகைய பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். உற்பத்தியாளர், விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

