/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊரக வளர்ச்சித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ADDED : ஆக 23, 2024 01:26 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று துவங்கியது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள, 49 பேரில், 14 பேரும்; வடக்கு ஒன்றியத்தில், 39 பேரில், 11 பேரும் தற்செயல் விடுப்பு எடுத்தனர். ஆனைமலை ஒன்றியத்தில் மொத்தம் உள்ள, 45 பேரில், 18 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.