/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் ஸ்டேஷனில் தொடரும் வில்லங்கம்; கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தொடரும் வில்லங்கம்

ADDED : ஆக 07, 2024 11:20 PM
அன்னுார் : கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், தொடர்ந்து போலீசார் குற்றச்செயலில் ஈடுபட்டு பிடிபடுவது தொடர்கதை ஆகியுள்ளது.
கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த ஓராண்டாக ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்த ரவிக்குமார், 40. இவர் அப்பகுதியில் தனியாக பேசிக் கொண்டு இருந்த பள்ளி மாணவர், மாணவியை போட்டோ எடுத்து மிரட்டியுள்ளார். மாணவியிடம் ஆபாசமாக பேசி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன், இதே போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியசேகரன், ஒருவரிடம்லஞ்சம் பெறும்போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டு சஸ்பெண்ட் ஆனார்.
அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஸ்டேஷனில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் தனபால் என்பவர் கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக வந்த தகவலை எடுத்து அந்த கும்பலிடம் பணத்தைப் பறித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்காமல் மறைத்து வைத்து, பின்னர் பிடிபட்டு டிஸ்மிஸ் ஆனார்.
கடந்த சில ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கோவில் பாளையத்தில் போலீசாரே குற்றச்செயலில் ஈடுபட்டு பிடிபடுவது தொடர்கதையாகி விட்டது.