/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டினுள் இருந்த கைத்துப்பாக்கி போலி எஸ்.ஐ.,யை தேடும் போலீசார்
/
வீட்டினுள் இருந்த கைத்துப்பாக்கி போலி எஸ்.ஐ.,யை தேடும் போலீசார்
வீட்டினுள் இருந்த கைத்துப்பாக்கி போலி எஸ்.ஐ.,யை தேடும் போலீசார்
வீட்டினுள் இருந்த கைத்துப்பாக்கி போலி எஸ்.ஐ.,யை தேடும் போலீசார்
ADDED : ஆக 06, 2024 06:58 AM
போத்தனூர்: வாடகைக்கு குடியிருந்தவர் போலி போலீஸ் என தெரியவந்ததையடுத்து, அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை, வீட்டின் உரிமையாளர் போலீசில் ஒப்படைத்தார். மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.
ஈச்சனாரி அடுத்த மாச்சேகவுண்டன்பாளையத்தில், தினேஷ் என்பவரின் வீடு உள்ளது. கடந்த மூன்று மாதத்திற்கு முன், வீரபத்ரன் என்பவர் அவ்வீட்டிற்கு குடிவந்தார். அப்போது அவரது ஆதார் அட்டை மற்றும் அவரது சகோதரர் வினு என்பவரின் போலீஸ் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை கொடுத்தார்.
கடந்த, 29ல் அங்குள்ள ஒரு கோவிலில் அடையாள அட்டையில் இருந்த வினு நின்றிருந்தார். அவரிடம், எந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறீர்கள் என கேட்டார். 'அமைச்சர் பாதுகாப்பு பணியில் உள்ளேன்' என, வினு கூறியுள்ளார்.
அப்போது அங்கு வந்த தினேஷின் உறவினர் அம்சவேணியிடம் வினு, 'நான் அமைச்சருக்கு எஸ்கார்ட் ஆக இருப்பதால், இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருகிறேன்' என கூறினார்.
கடந்த 3-ம் தேதி தினேஷ், தன்னிடமுள்ள மாற்று சாவியை பயன்படுத்தி, வினு குடியிருந்த வீட்டை திறந்து உள்ளே சென்றார்.
கைத்துப்பாக்கி ஒன்று, போலீஸ் தடி நான்கு, மெட்டல் டிடெக்டர் ஒன்று, 'தமிழ்நாடு போலீஸ்' என அச்சிடப்பட்ட அடையாள அட்டை பொருத்தும் டேக்குகள், வினுவின் போலீஸ் எஸ்.ஐ., அடையாள அட்டை, 'போலீஸ்' என எழுதப்பட்ட பிளாஸ்டிக் அட்டை உள்ளிட்ட, பல பொருட்கள் காணப்பட்டன. அதிர்ச்சியடைந்த தினேஷ், வினு போலி போலீஸ் எஸ்.ஐ.,யாக இருக்கக்கூடும் என கருதி, கைப்பற்றிய பொருட்களை மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
அவரது புகாரில், போலீஸ் எஸ்.ஐ., எனக் கூறி, மோசடிக்கு முயன்ற வினு மற்றும் வீட்டை வாடகைக்கு எடுத்த வீரபத்ரன் ஆகியோரை, போலீசார் தேடுகின்றனர்.