/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர், பாதாள சாக்கடை குழாய் பதிக்க மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை ஆய்வு
/
குடிநீர், பாதாள சாக்கடை குழாய் பதிக்க மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை ஆய்வு
குடிநீர், பாதாள சாக்கடை குழாய் பதிக்க மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை ஆய்வு
குடிநீர், பாதாள சாக்கடை குழாய் பதிக்க மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை ஆய்வு
ADDED : பிப் 26, 2025 04:14 AM
கோவை; கணபதியில் இருந்து சங்கனுார் ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்கவும், சத்தி ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கவும், மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நேற்று கூட்டாய்வு செய்தனர்.
கோவை மாநகராட்சி பகுதியில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில், விடுபட்ட பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகளை மூன்று மாதத்துக்குள் முடித்து தார் ரோடு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணபதி பகுதியில் சங்கனுார் ரோட்டில், குடிநீர் குழாய் பதிக்க வேண்டும்.
இதை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், குழாய் பதிக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும், குழாய் பதித்து குடிநீர் வினியோகித்ததும் உடனுக்குடன் சாலையை சீரமைக்க வேண்டுமென, பொறியியல் பிரிவினருக்கு கமிஷனர் அறிவுறுத்தினார்.
இதேபோல், சத்தி ரோட்டில் ராமகிருஷ்ணாபுரத்தில் இருந்து கீரணத்தம் பிரிவு வரை, பாதாள சாக்கடை குழாய் பதிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாலையை அகலப்படுத்த, 'மெட்ரோ ரயில்' திட்டம் செயல்படுத்த, நிலம் கையகப்படுத்த வேண்டும்.
அதன்பின், குழாய்களை இடம் மாற்றினால், ரோட்டை மீண்டும் தோண்ட வேண்டிய அவசியம் ஏற்படாது என, நெடுஞ்சாலைத்துறையினர் கூறினர். என்றாலும் கூட, பாதாள சாக்கடை குழாய்களை உடனடியாக மாற்றியமைக்க கோரியதால், ரோட்டின் மேற்குப்புறம் பதித்துக் கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டது.
ஆய்வின்போது, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் லிமிடெட் துணை தலைவர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செந்தில்குமார், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனபால் உள்ளிட்டோர் இருந்தனர்.

