sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சி மேயர் ராஜினாமா: கவுன்சிலர்கள் கூறுவதென்ன? 

/

மாநகராட்சி மேயர் ராஜினாமா: கவுன்சிலர்கள் கூறுவதென்ன? 

மாநகராட்சி மேயர் ராஜினாமா: கவுன்சிலர்கள் கூறுவதென்ன? 

மாநகராட்சி மேயர் ராஜினாமா: கவுன்சிலர்கள் கூறுவதென்ன? 


ADDED : ஜூலை 04, 2024 05:16 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மேயர் கல்பனா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறுவதென்ன?

ராமமூர்த்தி, மா.கம்யூ.,: அவரது ராஜினாமாவுக்கான காரணம், தலைமைக்குத்தான் தெரியும். கட்சிக்குள் பிரச்னையா என்பது தெரியவில்லை. இதுகுறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது.

சித்ரா வெள்ளிங்கிரி, ம.தி.மு.க.,: மேயராக தேர்ந்தெடுக்கப்படுபவர், ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தால், மக்களுக்கு நல்லது செய்ய முடியும். இவ்வாறு இடையில் ராஜினாமா செய்வதால், புதிதாக பொறுப்பு ஏற்பவர்களுக்கும் ஒரு தயக்கம் ஏற்படும். இதனால், மாநகராட்சி வளர்ச்சி பின்தங்கி விடும்.

ஷர்மிளா, அ.தி.மு.க.,: இந்த ராஜினாமா அவரது செயல்பாடற்ற தன்மையால் நிகழ்ந்தது. இதிலேயே அனைத்தும் அடங்கி விடும்.

பிரபாகரன், அ.தி.மு.க.,: இது, சம்பாதித்ததை அவர்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையால் நடந்தது. போட்டி போட்டுக் கொண்டு, அவர்களது கட்சித் தலைமைக்கு புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வைரமுருகன், தி.மு.க.,: உடல்நலம், குடும்பசூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக மேயர் தெரிவித்துள்ளார். அதை தலைமையும் ஏற்றுக் கொண்டுள்ளது. கோவை மாநகராட்சியை இதைவிட சிறப்பான ஒன்றாக மாற்ற, தலைமை திட்டமிட்டு இருக்கலாம்.

கதிர்வேல், தி.மு.க.,: என்ன காரணம் என்பது, இன்னும் தெளிவாக தெரியவில்லை. புதிதாக வருபவர்கள் எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனைவருக்கும் அனுபவம் உள்ளது. சிறப்பாக செயல்படுவார்கள்.






      Dinamalar
      Follow us