/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
/
மாநகராட்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
ADDED : ஆக 09, 2024 01:57 AM
கோவை;நிர்வாக நலன் கருதி மாநகராட்சி கணக்கு அலுவலர், நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாநகராட்சி மத்திய மண்டல நிர்வாக அலுவலர் செந்தில்குமார் வடக்கு மண்டலத்துக்கும்(தகவல் மைய பணிகள்), வடக்கு மண்டல நிர்வாக அலுவலர் வனிதா மத்திய மண்டலத்துக்கும், தெற்கு மண்டல கண்காணிப்பாளர் வெங்கடாசலம் வடக்கு மண்டலத்துக்கும், வடக்கு மண்டல கண்காணிப்பாளர் கலைமணி தெற்கு மண்டலத்துக்கும், வடக்கு மண்டல பொறியியல் பிரிவு கண்காணிப்பாளர் பெரோஸ்கான் மேற்கு மண்டலத்துக்கும், வடக்கு மண்டல உதவி வருவாய் அலுவலர் மணி மத்திய மண்டலத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொது கணக்கு பிரிவு கணக்கு அலுவலர் கார்த்திகேயன் கூடுதலாக வடக்கு மண்டல உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தை கவனிக்குமாறு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.