/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் இரண்டு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி
/
கோவையில் இரண்டு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி
கோவையில் இரண்டு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி
கோவையில் இரண்டு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி
ADDED : மார் 28, 2024 05:17 AM
கோவை, : பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, இரு மையங்களில் ஏப்ரல் 1ம் தேதி துவங்கவுள்ளதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி, 22ம் தேதி நிறைவு பெற்றுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்.,1ம் தேதி தொடங்கவுள்ளது.
விடைத்தாள்கள் அனுப்புவதற்கு மண்டலங்கள் பிரிக்கும் பணி, நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியாகவுள்ளன.
இதுகுறித்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் செயின்ட் மேரீஸ் பள்ளியிலும், பொள்ளாச்சியில் நகராட்சி அரசு பெண்கள் பள்ளியிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 6ல் வெளியிடப்படும்,'' என்றார்.