/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருத்தி சாகுபடி செயல்முறை விளக்கம்
/
பருத்தி சாகுபடி செயல்முறை விளக்கம்
ADDED : பிப் 21, 2025 11:17 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள மத்திய வேளாண் அறிவியல் நிலையத்தில், பருத்தி சாகுபடி செய்வது குறித்து, விவசாயிகளுக்கு மாதிரி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
காரமடை அருகே விவேகானந்தபுரத்தில், மத்திய வேளாண் அறிவியல் நிலையத்தில், கோவை வேளாண் அறிவியல் நிலையமும், மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையமும் இணைந்து, பருத்தி விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை, நடத்தியது. நிகழ்ச்சிக்கு வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் கோமதி தலைமை வகித்து, பருத்தியின் முக்கியத்துவத்தையும், விரிவாக்க செயல் திட்டத்தையும் எடுத்துரைத்தார்.
அடர் நடவு முறை, நீண்ட இடைவெளி பருத்தி சாகுபடி செய்யும் முறை குறித்து, விவசாயிகளுக்கு மாதிரி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சுரேஷ்குமார், பருத்தி சாகுபடி முக்கியத்துவத்தையும், கோவை மாவட்ட அளவில் பருத்தி சாகுபடி விவரத்தையும் விளக்கினார்.
மண்ணின் வளம் மேம்பாடு பற்றிய தகவல்களை ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பவித்ரா, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி இளம் தொழில்நுட்ப வல்லுநர் துரைசாமி ஆகியோர் விளக்கி கூறினர்.

