/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களை கவர்கிறது காட்டன் பேப் கண்காட்சி
/
பெண்களை கவர்கிறது காட்டன் பேப் கண்காட்சி
ADDED : பிப் 27, 2025 12:49 AM

கோவை: நாட்டின் புகழ்பெற்ற கைத்தறி ஆடைகளுடன், 'காட்டன் பேப்' கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை, ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் நடந்து வருகிறது.
வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தும், 120 அரங்குகள் உள்ளன. சேலைகள், சல்வார், டிரஸ் மெட்டீரியல், ஜூவல்லரி, பரிசுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில், பல்வேறு பட்டுச் சேலை நெசவாளர்கள், கைத்தறி அமைப்புகள் மற்றும் பட்டுக் கூட்டுறவு சங்கங்களும், தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்கின்றன. இடைத்தரகர்கள் இல்லாமல், தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் நேரடியாக வாங்கலாம்.
ஆரணி பட்டு, கிரேப் மற்றும் ஜார்ஜெட், ஷிபான், காஞ்சிபுரம், டிசைனர் பேன்சி, தர்மாவரம் பட்டுச் சேலைகள், ரா சில்க் மற்றும் டஸர், மங்களகிரி மற்றும் போச்சம்பள்ளி பட்டுச் சேலைகள் என, பலவகையான தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.
வரும் மார்ச் 10ம் தேதி வரை, நடைபெறும் கண்காட்சியை, காலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை பார்வையிடலாம்.