தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது


ADDED : ஏப் 28, 2024 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2024 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்;அன்னுார் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது செய்யப்பட்டார். சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

அன்னுாரின் வடக்கு பகுதியில், சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் நித்யா, எஸ்.ஐ., கவுதம் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர்.

அப்போது மொபட்டில் வந்த நபரை பிடித்தபோது, அவரிடம் லாரி டியூபில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டது. விசாரணையில் அவர் தொட்டிபாளையத்தை சேர்ந்த கறிப்புசாமி, 51, என தெரியவந்தது. அவர் கணுவக்கரை அருகே ஒரு தோட்டத்தில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அங்கு இருந்த 100 லிட்டர் சாராய ஊறல், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரங்கள், 20 கிலோ நாட்டுச் சர்க்கரை, பாத்திரங்கள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கறிப்புசாமியை அன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us