/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
55 கோடி ரூபாயில் கோர்ட் கட்டடம்
/
55 கோடி ரூபாயில் கோர்ட் கட்டடம்
ADDED : மார் 04, 2025 12:35 AM
கோவை:
கோவையில், 55 கோடி ரூபாய் செலவில், புதிய கோர்ட் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது.
கோவை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில், 14 நீதிமன்றங்கள் செயல்படும் வகையில், புதிய கட்டடம் கட்ட 54.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்தாண்டு நவ., 5ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக, 4.5 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய கோர்ட் கட்டட அடிக்கல் நாட்டுவிழா மற்றும் பூமிபூஜை நேற்று நடந்தது. கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா அடிக்கல் நாட்டினார்.
கோவை கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள், வக்கீல்கள் பங்கேற்றனர்.