/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறு தானியங்களில் இந்திய வரைபடம் உருவாக்கி ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
/
சிறு தானியங்களில் இந்திய வரைபடம் உருவாக்கி ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
சிறு தானியங்களில் இந்திய வரைபடம் உருவாக்கி ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
சிறு தானியங்களில் இந்திய வரைபடம் உருவாக்கி ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
ADDED : ஏப் 09, 2024 12:51 AM

கோவை;லோக்சபா தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, கோவை மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள ஒவ்வொரு துறை சார்பிலும், ஒவ்வொரு விதமாக தினமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மகளிர் திட்டம் சார்பில், தேங்காய் மட்டை நாரில் தயாரிக்கப்பட்ட ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு சின்னம், கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
வேளாண் துறை சார்பில் சிறுதானியங்களை கொண்டு, இந்திய வரைபடம் தயாரிக்கப்பட்டு, அதன் அருகில் ஓட்டுப்பதிவு இயந்திரம் இருப்பது போல் காட்சிப்படுத்தியிருந்தனர். இவ்விரு நிகழ்வையும், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று பார்வையிட்டார். மேட்டுப்பாளையம் காளம்பாளையம் கிராமத்தில், தாயனுார் பஸ் ஸ்டாப் அருகில், 100 சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கணபதியில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் நேற்று, வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், கலெக்டர் கிராந்திகுமார், தனி துணை கலெக்டர் சுரேஷ், ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, முதன்மை செயல் அலுவலர் கவிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

