ADDED : ஆக 02, 2026 09:01 PM
அ நிறம் | அளவு
ரூ.10.15 கோடி மோசடி புகார் மீது வழக்கு பதிவு கோவை: சிங்காநல்லுாரை சேர்ந்த தேவராஜ், மனைவி உஷா, மகள் ஐஸ்வர்யா, மருமகன் இளஞ்சியம் ஆகியோர் பழநி அருகே 66.67 ஏக்கரில் இயங்கி வந்த அரசு அனுமதி பெற்ற இரு கல்குவாரிகள், ஒரு கிரஷரை ரூ.28.90 கோடிக்கு கிணத்துக்கடவு தொழிலதிபர் நந்தகுமாருக்கு விற்க முடிவானது.
நந்தகுமார் முதற்கட்டமாக ரூ.15 லட்சமும், 2025 நவ.,ல் ரூ.10 கோடியும் வழங்கியுள்ளார். சொத்தை பதிவு செய்யாமல் தேவராஜ் குடும்பத்தினர் இழுத்தடித்தனர். பணம் தர மறுத்து மிரட்டியதாகவும், திட்டமிட்டு கூட்டுச்சதி செய்து மோசடி செய்ததாகவும் அளித்த புகாரின்படி, மாநகர குற்றப்பிரிவு போலீசார் தேவராஜ், உஷா, ஐஸ்வர்யா, இளஞ்சியம் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
