ADDED : ஜூலை 03, 2026 04:52 PM
போதைப்பொருள் விற்பனை
மூன்று பேர் மீது வழக்கு
வெரைட்டிஹால், சுந்தராபுரம் போலீசார் ரோந்து பணியின் போது, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆர்.ஜி. வீதியை சேர்ந்த வினோத்குமார், 57 மக்னராம், 55, போத்தனுார் ஹரிசிவன், 22 ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆறு பேர் கைது
சாய்பாபாகாலனி பகுதியில் கோவில்மேடு பகுதியில், சந்தேகிக்கும் வகையில் நின்று இருந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடம் 1.100 கிலோ கஞ்சா இருந்தது. பீகாரை சேர்ந்த குல்தேவ் மூக்கையா, 37 என்பது தெரியவந்தது. கஞ்சா மற்றும் 4,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
* கரும்புக்கடை போலீசார் ரோந்து பணியின் போது, புட்டுவிக்கி பகுதியில் கஞ்சா விற்ற சுந்தராபுரம் காஜா ஹூசைன், 26 கரும்புக்கடை அபாஸ், 30 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 1.200 கிலோ கஞ்சா, 51 போதைக்கு பயன்படுத்தும் வலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
*சரவணம்பட்டி போலீசார், ராமநாதபுரம் மதன்குமார், 28 சரவணம்பட்டி கமலேஷ், 21 கன்னியாகுமரி சஞ்சய், 23 ஆகிய மூவரை கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மூன்று வழக்குகள் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மதுபாட்டில் பதுக்கிய
ஒருவர் கைது
செல்வபுரம் கல்லமேடு பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த, சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் கடையில்
பொருட்கள் திருட்டு
பி.என்.பாளையம் பகுதியில், மோட்டார் விற்பனை கடையை தேவராஜன், 50 நடத்தி வருகிறார். அவரது வீட்டின் முன் விற்பனைக்காக வைக்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டன. அவரது புகாரின் பேரில், பீளமேடு அஜீத்குமார், 28 என்பவரை போலீசார் கைது செய்தனர்.
