தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விடுதி மாணவர்களுக்கு வாட்ஸ் அப் புகார் எண்

விடுதி மாணவர்களுக்கு வாட்ஸ் அப் புகார் எண்

விடுதி மாணவர்களுக்கு வாட்ஸ் அப் புகார் எண்


ADDED : ஜூலை 03, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் தங்கள் புகார்களைத் தெரிவிக்க, புதிய வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட குறைபாடுகள், நிர்வாக குளறுபடிகள், அச்சுறுத்தல்கள் தொடர்பான புகார்களை, 94454 77016 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு 24 மணி நேரமும் அனுப்பலாம்.

இந்த எண்ணுக்கு வரும் புகார்கள் உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய விசாரணை நடத்தப்படும். புகார் அளிக்கும் மாணவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், புகாரின் உண்மைத்தன்மை அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us