28 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
சூலூர் அடுத்த நீலம்பூர் தனியார் கல்லூரி ரோட்டில், போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற நபரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அந்நபர் அரியலூர் மாவட்டம் ராயபுரத்தை சேர்ந்த மருதமுத்து மகன் மருதுபாண்டி, 29, என்பது தெரிந்தது. அவர் வைத்திருந்த இரு பேக்குகளை சோதனை செய்த போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 28 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக் திருட்டு : இருவர் கைது
காரமடையை சேர்ந்தவர் அமீர், 25, தனியார் செல்போன் கடையில் பணிபுரிந்து வருசிறார். கடந்த 6-ம் தேதி தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். பின், காலையில் எழுந்து பார்த்த போது, வீட்டில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். காரமடை போலீசார் விசாரணையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த அப்துல் ரகுமான்,28, புலியகுளத்தை சேர்ந்த அரவிந்த் குமார், 23, இருவர் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இவர்களை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற இருவர் கைது
பெரியநாயக்கன்பாளையம் அருகே ஆர்.வி., நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, லோகநாதன், 35, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ, 200 கிராம் எடை உள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல சாமநாயக்கன்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜகோபால், 24, கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ, 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.