இருசக்கர வாகனம் திருட்டு
நல்லாம்பாளையம், முல்லை நகரை சேர்ந்தவர் சிவகிரி, 22, ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் தனது இருசக்கர வாகனத்தை துடியலூர் சந்தை கடை மைதானத்தில் நிறுத்திவிட்டு, கடைக்கு சென்று திரும்பினார். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது குறித்து, துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் பகுதியில், கடந்த ஜூன் 8 ம்தேதி கஞ்சா சாக்லேட்கள் விற்ற இருவரை பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சனாதன் டோரா மகன் அபிஷேக் டோரா, 30, அபிஷித் டோரா, 27 ஆகிய இருவர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க , மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன், கலெக்டருக்கு பரிந்துரைத்து இருந்தார். இதையடுத்து, அவர்கள் இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.