ADDED : ஜூலை 02, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் சார்பில், காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி வகுப்பு மோளப்பாளையத்தில் நடந்தது.
இதில், வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, காய்கறி பயிர்களில் உள்ள ரகங்கள், பருவம், கோடை உழவு மற்றும் விதை நேர்த்தி, மண் பரிசோதனை உள்ளிட்டவைகளை, விவசாயிகளுக்கு எளிதில் புரியும்படி விளக்கமாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, உதவி தொழில்நுட்ப மேலாளர் புனிதா, அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், பயிற்சிகள், உழவன் செயலி பயன்படுத்தும் முறை உள்ளிட்டவைகளை குறித்து எடுத்துரைத்தார். இவ்வகுப்பில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.