ADDED : ஜூலை 25, 2024 10:52 PM

பெ.நா.பாளையம் : தமிழக வேளாண் துறை சார்பில், பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை வாயிலாக, அட்மா திட்டத்தின் உள்மாவட்ட அளவிலான பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி வகுப்பு பெரியநாயக்கன்பாளையம் வட்டார அளவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்தது. பயிற்சியில், அட்மா திட்ட தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். தொழில்நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். வேளாண் துறை உதவி இயக்குனர் நமதுல்லா, வேளாண்துறை மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.
துணை வேளாண்மை அலுவலர் விஜயகோபால், பயிர் காப்பீடுகள் பற்றியும், வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சுரேஷ்குமார், கோடை உழவு மற்றும் நிலம் தயார் செய்தல் முதல் பூச்சி நோய் மேலாண்மை மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துக் கூறினார். இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.