/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முழுத்திறனை வெளிக்கொணரும் சி.எஸ்., அகாடமி பள்ளி
/
முழுத்திறனை வெளிக்கொணரும் சி.எஸ்., அகாடமி பள்ளி
ADDED : பிப் 27, 2025 09:25 PM
''மாணவர்களை நீண்ட கால வெற்றிக்குத் தயார்படுத்துகிறோம்,'' என, சி.எஸ்., அகாடமி பள்ளிகளின் நிறுவனர் மற்றும் இயக்குநர், டாக்டர் சித்தாரா விக்ரம் கூறினார்.
ஈரோடு மற்றும் கோவை சி.எஸ்., அகாடமி பள்ளிகளின் நிறுவனர் மற்றும் இயக்குநர், டாக்டர் சித்தாரா விக்ரம் கூறியதாவது: குழந்தையை வயதளவில் ஓராண்டுக்கு முன் சேர்ப்பதைக் காட்டிலும் ஒராண்டு தாமதமாகச் சேர்ப்பதே சிறந்தது. அது அவர்களின் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் வயது முதிர்ந்த குழந்தைகள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். எல்.கே.ஜி., வகுப்பில் சேர்க்க சிறந்த வயது 4. ஒன்றாம் வகுப்பில் சேர்க்க சிறந்த வயது 6. கே.ஜி., 2 - 2.5 வயதில் நல்ல மழலையர் பள்ளிக்குச் செல்வது குழந்தையின் சமூக, படைப்பாற்றல், இயக்கத் திறன்கள், பேச்சுத்திறன் மற்றும் கணித அடிப்படைத் திறன்களை மேம்படுத்த உதவுகிறது.எங்கள் பள்ளிகள் மாணவர்களை நீண்ட கால வெற்றிக்குத் தயார்படுத்தும் வகையில் அவர்களின் முழுத்திறனையும் வெளிக்கொணருமாறு செயல்பாட்டு முறையில் முழுமையான கல்வித்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

