/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பை: ஜெயேந்திர சரஸ்வதி, ராமகிருஷ்ணா வெற்றி
/
டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பை: ஜெயேந்திர சரஸ்வதி, ராமகிருஷ்ணா வெற்றி
டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பை: ஜெயேந்திர சரஸ்வதி, ராமகிருஷ்ணா வெற்றி
டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பை: ஜெயேந்திர சரஸ்வதி, ராமகிருஷ்ணா வெற்றி
ADDED : மார் 05, 2025 10:56 PM

கோவை:
டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பையை, ஜெயேந்திர சரஸ்வதி அணி மாணவியர் அணியும், ராமகிருஷ்ணா மாணவர் அணியும் வென்றது.
பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் நினைவு கிரிக்கெட் போட்டி, சாய்பாபாகாலனியில் உள்ள பள்ளி மைதானத்தில் நடந்தது. கடந்த ஜன., 24ம் தேதி துவங்கிய போட்டி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
மாணவர்கள் பிரிவில் எட்டு அணிகளும், மாணவியர் பிரிவில் நான்கு அணிகளும் 'லீக்' முறையில் விளையாடின. மாணவியருக்கான இறுதிப்போட்டியில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி அணியும், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஜெயேந்திர சரஸ்வதி அணி வீராங்கனைகள், 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 147 ரன்கள் எடுத்தனர். 148 ரன் இலக்குடன் களம் இறங்கிய மகரிஷி வித்யா மந்திர் அணியினர், 10 ஓவர்களில், 4 விக்கெட்டுக்கு, 22 ரன்கள் மட்டுமே எடுத்து, வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
ஜெயேந்திர சரஸ்வதி அணி வீராங்கனை அபர்ணா, 'ஆல் ரவுண்டர்' விருதையும், வீராங்கனை பிரதன்யா 'பெஸ்ட் பேட்டர்' விருதையும், வீராங்கனை ரியாஞ்ஜலின் 'பெஸ்ட் பவுலர்' விருதையும் பெற்றனர்.
மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணியும், ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, ராமகிருஷ்ணா அணியினர், 17.5 ஓவர்களில், 5 விக்கெட்டுக்கு, 84 ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய, ஜெயேந்திர அணியினர், 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 83 ரன்கள் எடுத்தனர். ஜெயேந்திர வீரர் செந்துார் 'ஆல் ரவுண்டர்' விருது வென்றார்.
ராமகிருஷ்ணா வீரர் தருண் ஆதித்யா, 'பெஸ்ட் பவுலர்' விருதையும், ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் அணி வீரர் ஹர்சன் ராம் 'பெஸ்ட் பேட்டர்' விருதையும், ராமலிங்க செட்டியார் அணி வீரர் கோகுல் கண்ணன், மிகவும் மதிப்புமிக்க வீரர் விருதையும் பெற்றார்.
வெற்றி பெற்ற அணியினருக்கு, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் குருசாமி, ராமலிங்கம் பள்ளி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர், பரிசு கோப்பை வழங்கினர். போட்டி ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.