/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அப்பாடா... குரங்கை பிடிச்சுட்டாங்க :ஆசிரியர் நகர் மக்கள் நிம்மதி
/
அப்பாடா... குரங்கை பிடிச்சுட்டாங்க :ஆசிரியர் நகர் மக்கள் நிம்மதி
அப்பாடா... குரங்கை பிடிச்சுட்டாங்க :ஆசிரியர் நகர் மக்கள் நிம்மதி
அப்பாடா... குரங்கை பிடிச்சுட்டாங்க :ஆசிரியர் நகர் மக்கள் நிம்மதி
ADDED : மார் 04, 2025 12:29 AM
சூலுார்:
மூன்று ஆண்டுகளாக பிடிபடாமல் போக்கு காட்டி வந்த குரங்கை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
சூலுார் அடுத்த சின்னியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது ஆசிரியர் நகர். இந்நகரை சுற்றி, 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இப்பகுதிக்கு குரங்கு ஒன்று வந்தது. அதில் இருந்து அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
ரோட்டில் போவோரிடம் பொருட்களை பறிப்பது, வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை உண்பது, சமைத்த உணவுகளை ருசி பார்ப்பது என, குரங்கின் அட்டகாசம் அதிகரித்தது. உச்சகட்டமாக, குடிநீர் தொட்டிகளில் குளிப்பது, குழந்தைகள், முதியவர்களை கடிப்பது உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தன. இதனால், மக்கள் அச்சமடைந்தனர்.
உள்ளாட்சி நிர்வாகம், வனத்துறையிடம் புகார் அளித்தனர். பல முறை குரங்கை பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், கூண்டு வைத்து குரங்கை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். ஒருவழியாக கூண்டில் குரங்கு சிக்கியது. இதையடுத்து, அதை வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விட்டனர். இதனால், ஆசிரியர் நகர் பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.