/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளியில் வீசப்படும் மதுபாட்டில்களால் பாதிப்பு
/
திறந்தவெளியில் வீசப்படும் மதுபாட்டில்களால் பாதிப்பு
திறந்தவெளியில் வீசப்படும் மதுபாட்டில்களால் பாதிப்பு
திறந்தவெளியில் வீசப்படும் மதுபாட்டில்களால் பாதிப்பு
ADDED : பிப் 24, 2025 09:38 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், காலி மதுப்பாட்டில்களை ஆங்காங்கே வீசிச் செல்லும் 'குடி'மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், டாஸ்மாக் மதுக்கடைகளும், எப்.எல்., 2 மற்றும் தனியார் பார்கள் அதிகளவில் செயல்படுகின்றன. சிலர், டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், கார்களில் அமர்ந்தவாறு குடிக்கின்றனர்.
அந்தந்த இடத்திலேயே காலி மதுபாட்டில்களையும், உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை, திறந்தவெளியில் வீசிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். போதை தலைக்கேறும் ஆசாமிகள், ரோட்டில் காலி பாட்டில்களை உடைக்கவும் செய்கின்றனர். கண்ணாடித் துண்டுகள் கால்நடைகள், பறவையினங்கள் உள்ளிட்ட உயிரினங்களை பதம் பார்க்கின்றன.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'திறந்தவெளியில் மது அருந்துபவர்கள், காரசாரமாகப் பேசிக்கொள்வது, வம்பு சண்டையில் ஈடுபடுவது என அச்சமூட்டும் வகையில் செயல்படுகின்றனர். பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யும் வகையில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர்.

