/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாளச்சாக்கடை வழியாக கழிவு நீர் வெளியேறுவதால் பாதிப்பு
/
பாதாளச்சாக்கடை வழியாக கழிவு நீர் வெளியேறுவதால் பாதிப்பு
பாதாளச்சாக்கடை வழியாக கழிவு நீர் வெளியேறுவதால் பாதிப்பு
பாதாளச்சாக்கடை வழியாக கழிவு நீர் வெளியேறுவதால் பாதிப்பு
ADDED : மே 27, 2024 12:41 AM

குப்பையை உண்ணும் கால்நடை
பொள்ளாச்சி, ஆர்.எஸ்.புரம்., முதல் தெரு ரத்தினம் நகர் வீதி சந்திப்பில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி சாலையில் செல்வோருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதுடன் ஆடு மாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் நிலை ஏற்படுகிறது. எனவே, கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..
- - மாணிக்கம், பொள்ளாச்சி.
ரோட்டோர குப்பை
பொள்ளாச்சி, விஜய ராகவன் வீதியில் ரோட்டோரத்தில் உள்ள மரங்களின் இலைகள் ஆங்காங்கே ரோட்டில் உள்ளது. மேலும், மழைநீருடன் கலந்திருப்பதால் துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் ரோட்டோரத்தில் உள்ள இலை மற்றும் குப்பையை அகற்றம் செய்ய வேண்டும்.
- - பெருமாள், பொள்ளாச்சி.
மின் கம்பிகளை மாத்துங்க
கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், பல இடங்களில் மின்கம்ப ஒயர்கள் அடிக்கடி அறுந்து கீழே விழுகின்றன. இதனால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கூட்டி செல்ல விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, மின்துறை சார்பில் பழுதடைந்த மின் ஒயர்களை மாற்றம் செய்ய வேண்டும்.
- -மது, கிணத்துக்கடவு.
பாதாள சாக்கடை சரியாகுமா
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் தனியார் உணவகம் அருகே, ரோட்டில் உள்ள பாதாளச்சாக்கடை மூடி வாயிலாக கழிவு நீர் அதிகமாக வெளியேறுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள், அதிக அளவு தடுமாறிச்செல்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- பாலாஜி, பொள்ளாச்சி.
மண்ணை அகற்றுங்க
கிணத்துக்கடவு, நெ.10.முத்துார் செல்லும் ரோட்டில் ஆங்காங்கே மண் ரோட்டில் படர்ந்துள்ளது. மற்றும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். எனவே, ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - கண்ணன், கிணத்துக்கடவு.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, பழைய அக்ரஹார வீதியில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியிலும், குடியிருப்புகளுக்கு அருகிலும் கொட்டப்படுகின்றன. நாய்கள் அவற்றை இழுத்து அப்பகுதி முழுவதும் பரப்பிவிடுகின்றன. சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
- கிருஷ்ணமூர்த்தி, உடுமலை.
கொசுத்தொல்லை அதிகரிப்பு
உடுமலை, செல்லம்வீதியில் குப்பைக்கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. கழிவுகள் தேங்குவதால் அப்பகுதியில் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது.
குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சியினர் அவற்றை அகற்ற வேண்டும்.
- வசந்தகுமார், உடுமலை.
புதரை அகற்றணும்
தேசிய நெடுஞ்சாலையில், ஐஸ்வர்யா நகர் எதிரில் பாலத்தில் செடிகள், கொடிகள் படர்ந்துள்ளன. இதனால், விஷஜந்துகள் ஜாலியாக உலா வருகின்றன. எனவே, அச்செடி, கொடிகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.
- கருப்பசாமி, உடுமலை.
ரோட்டில் கட்டுமான பொருட்கள்
உடுமலை பசுபதி வீதியில், ரோட்டை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் குப்பைக்கழிவுகள் ரோட்டோரத்தில் குவிந்து கிடக்கிறது. காற்றில் முழுவதும் பறந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.
- வானதி, உடுமலை.
அடையாளம் இல்லை
உடுமலை, கணக்கம்பாளையம், எஸ்.வி., புரம் பகுதியில் வேகத்தடை மிக குறுகலாகவும் அடையாளம் இல்லாமலும் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் மாலை நேரங்களில் அடிக்கடி தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
- ரவி, கணக்கம்பாளையம்.
சேதமடைந்த ரோடு
உடுமலை-பழநி ரோட்டில், ராஜலட்சுமிநகர் சந்திக்கும் பகுதியில், ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சேதமடைந்த ரோட்டை நகராட்சியினர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வினோத், உடுமலை.

