/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி அருகே குப்பை தீ வைத்து எரிப்பதால் பாதிப்பு
/
அங்கன்வாடி அருகே குப்பை தீ வைத்து எரிப்பதால் பாதிப்பு
அங்கன்வாடி அருகே குப்பை தீ வைத்து எரிப்பதால் பாதிப்பு
அங்கன்வாடி அருகே குப்பை தீ வைத்து எரிப்பதால் பாதிப்பு
ADDED : மார் 21, 2024 10:57 AM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, அம்பேத்கர் வீதி, மதுரை வீரன் கோவில் அருகே, 14 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த மையத்தில், 15 குழந்தைகள் உள்ளனர். மேலும், இந்த மையம் கடந்த பிப்ரவரி மாதம் புனரமைப்பு செய்யப்பட்டது.
இந்த அங்கன்வாடி மையத்தின் அருகே, அதிக அளவு குப்பை கொட்டி அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதில், ஏற்படும் புகை அங்கன்வாடி மையம், கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பரவுகிறது. இதனால் அங்கன்வாடி மையம் வரும் குழந்தைகள் மற்றும் குடியிருப்புவாசிகளுக்கு சுவாச கோளாறு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதுடன், பொதுச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'காலை, 8:30 முதல் மாலை, 4:00 மணி வரை அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. குழந்தைகள் மையத்தில் இருந்து சென்ற பின், குப்பைக்கு தீ வைத்து எரிக்கலாம். ஆனால், குழந்தைகள் மையத்தில் இருக்கும் போதே, சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். எனவே, இப்பகுதியில் குப்பைக்கு தீ வைப்பதையும், குப்பையை வேறு இடத்தில் கொட்டவும், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

