ADDED : மே 23, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தாலுகா அலுவலகம் எதிரே உள்ள, இ-சேவை மையத்துக்கு தினமும் அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். அங்கு, ஆதார் திருத்தும், புதிய ஆதார் பதிவு செய்தல் மற்றும் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பிற சேவைகள் செய்து தரப்படுகிறது.
இந்த கட்டடத்தின் உள் பகுதி தூசு படிந்துள்ளது. கட்டடத்தின் வெளிப்புறத்தில் உள்ள ஜன்னல், மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதுமட்டும் இன்றி கட்டடத்தின் சுற்று பகுதி முழுவதும் புதர் சூழ்ந்தும், குப்பை நிறைந்தும் உள்ளது.
இங்கு தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்வதால், நோய் தொற்று மற்றும் சுவாசக்கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, இ-சேவை மைய கட்டடத்தை சுத்தம் செய்து, புதுப்பிக்க வேண்டும்.

