/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த வேகத்தடை; ஓட்டுநர்கள் திணறல்
/
சேதமடைந்த வேகத்தடை; ஓட்டுநர்கள் திணறல்
ADDED : ஆக 29, 2024 10:04 PM

வால்பாறை : வால்பாறை நகரில் அமைக்கப்பட்டுள்ள வேகக்தடை சேதமானதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
வால்பாறையில் இருந்து - ஆழியாறு செல்லும் ரோட்டில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் ரோடு விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. குறிப்பாக மழை காலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை நகரில் விபத்தை தவிர்க்கவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், பல்வேறு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இருசக்கரவாகனங்களில் வருபவர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். மேலும், வேகத்தடை சேதமடைந்து உள்ளதால், ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் அருகே, மூன்று ரோடுகள் சந்திக்கிறது. அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
வால்பாறை நகரில், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பலரும், வேகத்தடை சேதமானது தெரியாமல், தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். விபத்து ஏற்படாமல் இருக்க, சேதமான வேகத்தடையை உடனடியாக சீரமைத்து, வெள்ளை நிற கோடு போட வேண்டும்,' என்றனர்.