/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழ மரங்களில் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும்
/
பழ மரங்களில் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும்
ADDED : மே 26, 2024 11:06 PM
சூலூர்:சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மழை காலங்களில் பழ மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மா, கொய்யா, எலுமிச்சை போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்காத வகையில் குச்சிகளை தாங்கலுக்காக கட்ட வேண்டும். கனமழை மற்றும் காற்று வீசி முடித்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் வேர் பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.
தென்னை மரங்களை சுற்றி உள்ள மண்ணை, உள்நோக்கி சாய்வாக ஆழப்படுத்தினால், மழைநீர் முழுவதும் மரத்தின் வேர் பகுதிகளுக்கு கிடைக்கும். மழை பொழிவினை உரிய வடிகால் வசதி செய்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

